Saturday, May 4, 2013


பிரியங்கா சோப்ரா எனக்கு சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும் அவரிடம் எனக்கு நெருக்கமான தொடர்பு கிடையாது என்றார் நிலா.

சரியான அறிமுகம் இல்லாவிட்டாலும் பிரபலமான ஹீரோயின்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல் சில ஹீரோயின்கள் காட்டிக் கொள்வார்கள்.

ஆனால், பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ராவின் உறவுக்கார பெண் நிலா (மீரா சோப்ரா) சற்று வித்தியாசப்படுகிறார். பிரியங்கா உறவுக்கார பெண்ணாக இருந்தாலும் அவரிடம் நெருங்கிய தொடர்பு கிடையாது என்கிறார்.

 அவர் கூறும்போது,"கேங்ஸ் ஆப் கோஸ்ட்" இந்தி படத்தில் நடிக்கிறேன். பிரியங்கா சோப்ராவின் உறவுப்பெண்தான் நான். ஆனால் அவருடன் எனக்கு நெருக்கமான நட்போ தொடர்போ கிடையாது.

என் பெற்றோரும் அவர் பெற்றோரும் தான் நன்கு பழகுவார்கள். தமிழில் "அன்பே ஆருயிரே" படத்தின் மூலம் அறிமுகமானேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். விரைவில் பரத்துடன் நடித்துள்ள கில்லாடி திரைக்கு வரவுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிப்பது போல் இந்தியிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கிறேன். இப்படத்தின் கதையை இயக்குனர் சதீஷ் சொன்ன போது சிரித்துக் கொண்டே இருந்தேன். அவ்வளவு காமெடி.

கடந்த ஒரு வருடமாக நல்ல படத்தில் நடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below