துருவ நட்சத்திரம் படத்தில் மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் சிம்ரன். தமிழ் திரையுலகில் ரசிகர்களால் மறக்க முடியாக நாயகிகளில் ஒருவர் சிம்ரன்.
குறிப்பாக தனது ஸ்லிம் மற்றும் கவர்ச்சியான உடம்பாலும், அசத்தலான நடனத்தாலும் ரசிகர்களை கட்டிபோட்டவர் என்றே சொல்லலாம்.
2003ம் ஆண்டு தீபக்கை திருமணம் செய்து கொண்டவர் அதன்பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.
பின்னர் ஒருகட்டத்தில் டி.வி. சீரியல்களில் நடித்தவர், சேவல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.அதன்பின் சுந்தர்.சி உடன் ஐந்தாம் படை, சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சிம்ரன் மீண்டும் சூர்யாவுடன் துருவநட்சத்திரம் என்ற படத்தில் இணைய உள்ளார்.
இதுதொடர்பாக கவுதமை, சிம்ரன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment