Thursday, May 2, 2013


குங்குமப்பூவும் கொஞ்சுப்புறாவும் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். அதன்பிறகு ராசுமதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர், இப்போது போங்கடி நீங்களும் உங்க காதலும் என்றொரு படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஆத்மியா, காருண்யா என்று இரண்டு ஜோடிகள். இப்படம் பற்றி ராமகிருஷ்ணன் கூறுகையில், முன்பெல்லாம் காதல் ரொம்ப உண்மையாக இருந்தது. ஆனால் சமீபகாலத்து காதலை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அதாவது இதற்கு பெயர் காதலா? இல்லையா? என்பதே புரியவில்லை. ஏதோ பழகுகிறார்கள். திடுதிப்பென்று பிரிகிறார்கள்.

பின்னர் அதே வேகத்தில் வேறு ஜோடி தேடுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த காலத்து காதலைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லும் அவர், இப்படத்தை நான் ஜாலியாக இயக்கியிருந்தாலும், காதல் என்றால் என்ன என்பதையும் விளக்கியிருக்கிறேன் என்கிறார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below