நேற்று அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக இப்படத்தின் இயக்குனரான விஷ்ணுவர்தன் யூடியூப் தளத்தில் அஜித் 53க்கான டீஸரை வெளியிட்டார்.
இது வெளியாகி 1 நாளே ஆனா நிலையில் 9 லட்சம் பார்வைகளை கடந்து 1 மில்லியன் இலக்கை இன்னும் சில மணிநேரங்களில் தொட்டுவிடும் எனத்தெரிகிறது. இந்தியாவிற்கான யூடியூப் பக்கத்தில் இதுவே தற்பொழுது முதலிடத்தில் உள்ளது.
யூடியூப் மட்டுமல்லாது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் பெருமளவில் பகிரப்படுகிறது. இதுவரையிலும் தமிழ் திரைப்பட வீடியோ ஒன்று இவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை என்றநிலையில் இது ரெக்கார்ட் படைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இந்த யூடியூப் டீஸரிலேயே படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை எனவும் தல தெரிவித்துள்ளார். தலைப்பே வைக்காமல் ஒரு படம் இவ்வளவு வரவேற்பை பெற்றது திரைத்துறை சார்ந்தவர்களே பிரமித்து பார்க்கிறார்கள்.
யூடியூப் தளத்தில் அஜித் 53க்கான டீஸரை பார்க்க...
reached million!
ReplyDeletethalaaaaaaaaa always great human being
ReplyDelete