பெங்களூர்: நடிகை ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பாந்தனா பெங்களூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஹாரிஸை ஆதரித்து தமிழில் பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பெங்களூர் சாந்தி நகரில் போட்டியிடு்ம் காங்கிரஸ் வேட்பாளர் ஹாரிஸை ஆதரித்து நடிகை திவ்யா ஸ்பாந்தனா பிரச்சாரம் செய்தார்.
சாந்தி நகர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் அவர் தமிழில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து அவர் எப்படி தமிழில் பிரச்சாரம் செய்யலாம் என்று கன்னட அமைப்புகள் பிரச்சனையை கிளப்பியுள்ளனர்.
அவருக்கு எதிராக கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் போராட்டமும் நடத்தின. மேலும் ரம்யா எப்படி தமிழில் பிரச்சாரம் செய்யலாம் என சில டிவி சேனல்களும் விமர்சித்து செய்து ஒளிபரப்பின.
இது குறித்து திவ்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் தமிழில் பேசினேன் என்று குறை கூறுபவர்களின் பிள்ளைகள் ஆங்கில கல்லூரிகளில் படிக்கிறார்கள். பிறருக்கு போதிக்கும் முன்பு அதை அவர்கள் பின்பற்றட்டும்.
என்னை விமர்சிக்கும் டிவி சேனலின் இயக்குனருக்கே ஒரு வார்த்தை கூட கன்னடம் தெரியாது.
அவர்களிடமே குறை இருக்கையில் என்னை அதிகாரம் செய்ய அவர்கள் யார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment