Friday, May 31, 2013

ஹீரோயின்களைப் பொறுத்தவரை, தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிற இடமே தெரியாமல் இருந்தால், அவர்களின் மார்க்கெட்டும் எகிறாது, சம்பளமும் உயராது. அப்படித்தான், இவ்வளவு காலமும் இருக்கிற இடம் தெரியாமலேயே இருந்து வருகிறார் ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி.

தனக்கு பின் சினிமாவில் நுழைந்த ஹீரோயின்களெல்லாம், நான்கு படங்களிலேயே, சில லட்சங்களில் இருக்கும் தங்களது சம்பளத்தை பல லட்சங்களாக ஆக்கி படூ ஸ்பீடாக சென்று கொண்டிருக்க சுவாதி மட்டும் இன்றுவரை சில லட்சங்களுக்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இதுவரை இந்த சூட்சமம் புரியாமல் இருந்தாராம் சுவாதி. அதனால், தற்போது தமிழில்,சில படங்களில் சைலண்ட்டாக நடித்து வரும் சுவாதி, தன்னைப் பற்றிய காதல் உள்ளிட்ட கிசுகிசுக்கள் வருவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறாராம்.
பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வந்தால் அதில் நம் பெயர் அடிக்கடி வரும், அப்போது நம்மை டைரக்டர்கள் ஞாபகம் வைத்து நடிக்கக் கூப்பிடுவார்கள் என்று கணக்கு போட்ட சுவாதி தனக்கு பழக்கமான சில தமிழ்சினிமா ரிப்போர்ட்டர்களுக்கு போன்போட்டு கிசுகிசு எழுதச் சொல்கிறாராம்.

ஆனால் ரிப்போர்ட்டர்களோ இந்தப்பொண்ணு தமிழ்ல நடிச்சதே ரெண்டு,மூணு படங்கள் தான், அப்படியிருக்கும் போது இந்தப்பொண்ணைப் பத்தி என்னான்னு எழுதுறது என்று நொந்து கொள்கிறார்களாம்.

பேசாம ‘சித்தி கொடுமை’ன்னு எழுதுங்களேன்...

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below