Friday, May 31, 2013

3டி’ படம் என்றால் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கக்கூடிய படமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு உதாரணமாக ரிலீஸாக இருக்கும் படம் தான் தேடி பிடி அடி என்கிற 3டி படம். ஆமாம் இந்தப்படத்தைப் பார்க்க ஸ்பெஷலாக எந்த கண்ணாடியும் தேவைப்படாது.

மகி, கெவின், அர்ஜுன், வின்னி ராஜா, யாஷிகா, சங்கவி என புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தை கதை,திரைக்கதை,வசனம், எழுதி டைரக்ட் செய்கிறார் புதியவர் ஏகன்.
இது 3டி படமா..? என்று கேட்டால், இல்லை ‘தேடி பிடி அடி’ என்ற படத்தின் டைட்டிலைத்தான் சுருக்கமாக ‘3டி’ என்று வைத்திருக்கிறேன் என்றார் ஏகன்.

தொடர்ந்து படத்தைப் பற்றி கூறிய அவர்,

டெல்லி,மும்பை போன்ற பெரும் நகரங்களில் மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அப்படிப்பட்ட நம் நாட்டில் டேட்டிங் கலாச்சாரம் வீபரீதத்தில் போய் தான் முடிகிறது. அதிலும் எங்கு செல்கிறோம் என்று செல்கிறவர்களுக்கு தெரியாமலேயே நடக்கும் blind dating மிகவும் ஆபத்தானது.

இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தான் இந்தப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறேன், ஆனால் அதேநேரம் ஃப்ரெண்ட்ஷிப்புக்குள் பாதுகாப்பாக,ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக நடக்கும் டேட்டிங்குகளை இதில் நான் விமர்சிக்கவில்லை என்றார்.

நான் மணிரத்னத்தின் படங்களைப் பார்த்து அவரை மானசீக குருவாக ஏற்று சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று டைரக்டராகி இருக்கிறேன். அதனால்தான் மோகன் என்கிற எனது பெயரை ஏகன் என்று மாற்றிக் கொண்டேன்.

அடடே இந்த விஷயம் மணிரத்னத்துக்கு தெரியுமா..?

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below