ஏற்கனவே சமந்தாவுக்கு தோல் அலர்ஜி பிரச்சனை இருப்பதால் பயந்து போன அவர் தற்போது வெயிலின் உக்கிரத்துக்கு பயந்து போய் வெளிநாட்டுக்கு ஓடி விட்டார்.
சமந்தா, கடந்த ஒரு வருடமாக தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தோல் சிகிச்சைக்காக, ஒரு வருடத்திற்கு முன்பு, சில வீட்டில் ரெஸ்ட் எடுத்த அவர், அதற்கு பின், ‘ஆட்டோ நகர்’, ‘யெட்டோ வெள்ளிப் போயிந்தி மனசு’ உள்ளிட்ட தெலுங்குப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதால், ரொம்பவும் களைப்பாக இருக்கிறாராம்.
மேலும் "இந்த மே மாதம் வந்தாலே, எனக்கு ரொம்ப பீதியாக இருக்கிறது. ஆந்திராவில் அடிக்கும் வெயிலை நினைத்தாலே, பயமாக இருக்கிறது என்று சொல்லும் சமந்தாவுக்கு தற்போது படப்பிடிப்புகளிலுருந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைத்திருப்பதால் அதை உற்சாகமாகக் கழிக்க வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டாராம். ஆந்திரா வெயிலிலிருந்து தப்பிக்க இதை விட்டால் எனக்கு வெறு வழி தெரியவில்லை என்று கொஞ்சம் நடுக்கத்துடனே சொல்கிறார் சமந்தா.
0 comments:
Post a Comment