நடிகை சனாகான் மும்பையில் தனது உறவுக்கார இளைஞர் காதலிக்கும் மைனர் பெண்ணை காரில் கடத்த முயன்றதாக பொலிசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
சனாகானை கைது செய்ய பொலிசார் தேடி வருகிறார்கள் என்று கூறப்பட்டது.
தமிழில் சிம்பு ஜோடியாக சிலம்பாட்டம் படத்தில் நடித்தார் சனாகான். இவர், சில்க்ஸ் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் டைரி படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
சல்மான்கானுடன் `மெண்டல்' என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார். மைனர் பெண் கடத்தல் வழக்கில் பொலிசுக்கு பயந்து தலைமறைவானதாக வெளியான செய்திகளுக்கு சனாகான் பதில் அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், பொலிசுக்கு பயந்து நான் தப்பி ஓடவில்லை. எங்கேயும் நான் போய் விடவில்லை. படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்துக் கொண்டு இருக்கிறேன்.
பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். மைனர் பெண்ணை நான் கடத்தியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அந்த பெண்ணின் தாய் எனது ரசிகை என்றனர்.
அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்பட்டது. அந்த பெண்தான் என்னிடம் உறவுக்கார இளைஞருடன் சென்று அவரது தாயை பார்க்கும்படி கூறினாள்.
நான் பின்னால் வருகிறேன் என்றும் தெரிவித்தாள். நான் எனது உறவுக்கார இளைஞனை பார்க்க போனபோது அவர்தான் ஐஸ்கிரீம் பார்லரில் இருந்த அப்பெண்ணை சந்திக்கும்படி வற்புறுத்தினார்.
உறவுக்காரருக்கும் அந்த பெண்ணுக்கும் பிரச்சினை இருந்து இருந்தால் அவர் ஏன் என்னை சந்திக்க வரவேண்டும். அந்த கட்டிடத்தில் உள்ள சிசி டி.வி. கமெராவில் இவை எல்லாம் பதிவாகி இருக்கும் அதை ஆராய்ந்தால் உண்மைகள் தெரியும்.
நான் எப்போது அங்கு போனேன் எவ்வளவு நேரம் அந்த இடத்தில் இருந்தேன். கமெராவில் இருக்கும் அந்த பகுதி மக்கள் நெரிசல் மிகுந்தது. அங்கு எப்படி அப்பெண்ணை நான் கடத்த முடியும் என்றும் என்னைப்பற்றி மக்களுக்கு தெரியும் எனவும் கூறினார்.
0 comments:
Post a Comment