Thursday, May 16, 2013


ஜாக்கெட் அணியாமல் நடிக்க லட்சுமிராய் மறுத்த வேடத்தை இனியா ஏற்றார். மாசாணி படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறார் இனியா. 

இதே வேடத்தில் லட்சுமிராயை நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார். இது பற்றி பட இயக்குனர் எல்ஜிஆர் கூறியது: உயர் ஜாதி வாலிபனுக்கும், தாழ்ந்த இன பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. ஜாதி வெறி பிடித்த வாலிபனின் அண்ணி இந்த காதலை எதிர்க்கிறார்.

இந்நிலையில் தாழ்ந்த இன பெண் கர்ப்பமடைகிறாள். கோபம் அடைந்த அண்ணி இருவரையும் தீர்த்துக்கட்டுகிறார். கொல்லப்பட்டவர்கள் ஆவியாக வந்து பழிவாங்குகின்றனர். 10 வருடத்துக்கும் மேலாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த ராம்கி இதில் மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார். காதலியாக இனியா நடிக்கிறார். கதைப்படி ஹீரோயின் ஜாக்கெட் அணியக்கூடாது. இதில் நடிப்பதற்காக லட்சுமிராயிடம் கேட்டேன்.

ஜாக்கெட் அணியாமல் நடிக்க வேண்டும் என்றதும் அவர் மறுத்துவிட்டார். பின்னர் இனியாவிடம் கூறியபோது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை ஏற்று ஜாக்கெட் அணியாமல் நடிக்க ஒப்புக்கொண்டார். ரோஜா, சரத்பாபு, மனோபாலா, சிட்டிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். 

மதுரை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, காரைக்குடி போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. தயாரிப்பு எம்.எஸ்.சரவணன். ஒளிப்பதிவு ராஜகுரு. இசை பாசில்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below