Thursday, May 16, 2013

சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவரும் காளகஸ்தி கோவிலுக்கு ஜோடியாக சென்று சமீபத்தில் வழிபட்டனர். ராகு-கேது பூஜையில் ஈடுபட்டார்கள். அவர்களுடன் பெற்றோரும் கலந்து கொண்டார்கள். 

அப்போதுதான் ரகசியமாக வைத்திருந்த இவர்களின் காதல் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த வாரம் சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சித்தார்த்தும் சமந்தாவும் பங்கேற்றனர். 

சித்தார்த் மேடையில் ஏறி “என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்” என்று சமந்தாவை நோக்கி பாடினார். கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பினர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை சமந்தா மறுத்துள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:- 

நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்திகள் பரவி உள்ளன. சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது. பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனவே இந்த வதந்திகளை நிறுத்தும்படி வேண்டுகிறேன். 

தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்குகிறது. 

இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.      

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below