நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன் என கூறியுள்ளார் அட்டகத்தி நாயகி நந்திதா.இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பெங்களூரை சேர்ந்தவள். நடிகையாக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு.
ஆனால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் நடிகையாகியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன்.என் பெற்றோரிடம் பேசாமல் தனி அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். 3 நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.
பிறகு நிபந்தனைகளுடன் என்னை நடிகையாக பெற்றோர் சம்மதித்தனர்.
படிப்பை முடித்துவிட்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள், ஏற்றுக்கொண்டேன்.
அட்டகத்தி பட வாய்ப்பு வந்தபோது ஏற்றுக்கொண்டேன்.
எதிர்நீச்சல் படத்தில் மேக் அப் போடாமல் நடித்தேன். இரட்டை ஹீரோயின் கதை என்பதால் நான் நடிக்க மறுத்ததாக எழுதினார்கள், அது தவறு.
என்ன வாய்ப்பு வந்தாலும் அதில் எனது கதாபாத்திரம் என்ன என்பதை மட்டும்தான் பார்க்கிறேன்.
ஒரு வருடத்துக்குள் 4 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment