ஹிந்திப் படப்பிடிப்பின் போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தார் நடிகை ஸ்ருதிஹாஸன்.
ஹிந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் ராமைய வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாஸன், ஒரு காட்சியைப் படமாக்கும்போது இயக்குநர் பிரபுதேவாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தபோது சட்டென்று நீரில் வழுக்கி விழுந்தார்.
அவருக்கு காலில் லேசான அடியும், சுளுக்கும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் வழக்கம் போல படப்படிப்புக்கு வந்தார் ஸ்ருதி.
ராமையா வஸ்தாவைய்யா படத்தில் கிரிஷ் குமார், சோனு சூட், ரந்திர் கபூர், பூனம் தில்லான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபு தேவா இயக்குகிறார்
0 comments:
Post a Comment