Monday, May 27, 2013

மே மாதம் 9ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகாக சண்டிகார் மரியாட் விடுதியில் ராஜஸ்தான் வீரர்கள் வந்து தங்கினர். 

அன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விடுதியின் வராண்டாவில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள் ஸ்ரீசாந்தின் நடவடிக்கைகளை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.


இரவு 10.15 மணி பதிவு: கிப்ட்-பேக் வைத்திருந்த அன்கிட் சவான், ஜிஜு ஜனார்தன், ஆகியோர் ஸ்ரீசாந்த் அறைக்கதவை தட்டுகின்றனர். ஸ்ரீசாந்த் வெளியில் வந்து அவருடன் 10 நிமிடம் பேசுகிறார்.

10.25 மணி பதிவு: கிப்ட் பேக்கைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீசாந்த் அங்கு வந்த பெண்ணுடன் பேசுகிறார். அப்போது மேலும் இரண்டு பேர் வருகின்றனர்.



10.55 மணி பதிவு: ஸ்ரீசாந்த், சவான் இருவரும் அந்தப் பெண்ணுடன் ஓட்டலை விட்டு வெளியே செல்கின்றனர்.

நள்ளிரவு 2.19மணி: வேறு ஒரு பெண்ணுடன் புதிய உடையில் ஸ்ரீசாந்த் வருகிறார். 10.55 மணிப்பதிவுக்குப் பிறகு சுமார் 3 மணிநேரம் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இப்போது சவானும் சேர்ந்து மூவரும் ஸ்ரீசாந்த் அறைக்குள் செல்கின்றனர்.


அதிகாலை 3.55 மணி பதிவு: ஒன்றரை மணி நேரம் கழித்து வெளியே வரும் ஸ்ரீசாந்த் வெராண்டாவில் அப்படியே சுவற்றை ஒட்டி சரிந்து விழுகிறார். போதையில் இருந்தாரா என்பது தெரியவில்லை. சவான் அவருக்கு உதவுகிறார்.

காலை 5.35 மணி பதிவு: ஸ்ரீசாந்த் மட்டும் நடைபாதையில் காணப்படுகிறார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below