கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கும் வணக்கம் சென்னை படத்திற்காக ஒரு களேபரமான பெண்ணைக் கூட்டி வந்து ஒரு பாடலுக்கு பாட வைத்துள்ளனர். ரொம்ப வயதானவர்தான்..
ஆனாலும் கவர்ச்சியில் இன்னும் பட்டையைக் கிளப்புகிறார் இந்த அம்மணி. பெயர் ஹார்ட் கெளர். படு ஹாட்டானவர் என்பதால் இந்த ஹார்ட் பட்டம் சேர்ந்து விட்டது. பஞ்சாபிப் பெண். இங்கிலாந்தில் டெர்ரர் ஆன ரேப் பாடகியாவார். இவரது குரலைப் போலவே இவரது கவர்ச்சியும் ரொம்பப் பிரபலம் அங்கு.ஆடிக் கொண்டே பாடுவதிலும், பாடும்போது ஆடுவதும் இவரது சிறப்பம்சங்களாகும்..
ஆண்ட்ரியாவுக்கு அழுத்தமான முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய அனிருத்தான் இந்த வணக்கம் சென்னை படத்தின் இசையமைப்பாளர்.
கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கும் முதல் படம்தான் இது. இதில் சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கிறார்கள்.. கடிப்பதற்கு சந்தானம் இருக்கிறார்.

இப்படத்தில் கொலை வெறி பாடலுக்கு இணையான ஒரு பாடலைத்தான் தற்போது மெனக்கெட்டு ரெடி செய்து வருகிறார் அனிருத் ஏற்கனவே இப்படத்தின் இந்தப் பாடலுக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த அர்ஜூன் கூமாரசாமி என்பவரை கூட்டி வந்துள்ளனர், பாட வைப்பதற்காக. இப்போது ஹார்ட் கவுரும் வந்துள்ளார்.
ஹார்ட் கவுர் இந்திப் பாடல்கள் சிலவற்றை ஏற்கனவே பாடியுள்ளார். அதில் ரொம்ப கிக்கானது, ஏக் கிளாஸ்ஸி, பைசா பெக் ஆகியவை. அதேபோல அக்லி அவுட் பக்லி படத்தில் இடம் பெற்ற கிளப் பாட்டான தல்லியிலும் துள்ளி விளையாடியவர்.ஹார்ட் கவுரின் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவில் குத்துப் பாட்டுக்கு ஓஹோன்னு ஆடலாம் என்று சொல்கிறார்கள் அவரை நேரில் பார்த்தவர்கள்…
0 comments:
Post a Comment