Thursday, May 23, 2013

ஒரு புகைப்படத்திலிருந்து அதன் பின்னணியினை photoshop போன்ற படத்தொகுப்பானினை கொண்டு நீக்குதல் மிகவும் நேரமெடுக்கும் ஒரு காரியமாகும். 

இதனை ஒரே சொடுக்கில் இலகுவாக செய்வதெற்கென வந்துள்ளது Clipping Magic எனப்படும் ஒரு இலவச இணைய மென்பொருள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் படத்தின் பின்னணியை ஒரு நிறத்திலும், வெட்டி எடுக்க தேவையான பகுதியை ஒரு நிறத்திலும், நிறம் கொடுத்து விடவேண்டியதுதான். 



இந்த இணைய மென்பொருள் மிகுதி வேலையினை பார்த்துக் கொள்ளும்.


அவர்களது இணையத்தளத்தில் உங்கள் படத்தினை தரவேற்றிய பின்னர், அங்கே தரப்படும் சிவப்பு நிறத்தினால் புகைப்படத்தில் உங்களுக்கு தேவையில்லாத பின்னணியினையும், பச்சை நிறத்தினால் உங்களுக்கு தேவையான பகுதியினையும் நிறம் கொடுக்க வேண்டியதுதான். 

உடனடியாகவே மாற்றங்களை வலது புறத்தில் நீங்கள் காணமுடியும்

உடனே சென்று உபயோகித்து பாருங்கள் : www.clippingmagic.com

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below