Saturday, May 18, 2013


மன்மதனாக இருந்த சிம்பு தற்போது வெள்ளை மனம் கொண்ட வெண்மதனாக மாறி வருகிறாராம்.

ஏற்கனவே காதல் சர்ச்சைகளில் பரப்பரப்பாக பேசப்பட்டார். தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார்.
ஆனால் சமீப காலங்களில் சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தெரிவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

படங்களில் கூட இமேஜ் பார்க்காமல் நடிக்கிறார். பேச்சிலும் மென்மையை கடை பிடிக்கிறார். அத்துடன் ஆன்மீக செயல்பாடுகளிலும் ஈடுபட தொடங்கி உள்ளார்.

சிம்புவுக்கு பிடித்த உணவாக இருப்பது அசைவம். அந்த உணவு வகைகளை தற்போது சாப்பிடுவதை தவிர்க்கிறார்.

நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகள் விழாக்களில் பங்கேற்பதையும் நிறுத்தி உள்ளார். நண்பர்களுடன் சுற்றுவதையும் குறைத்துக் கொண்டார்.

அடிக்கடி தனியாக கண்களை மூடி பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்கிறார். சிம்பு தற்போது வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் நடிக்கிறார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below