Saturday, May 18, 2013


அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் அஜித்தின் 53-வது திரைப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு (ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்றாங்க)’குலுமனாலி’ குளிரில் படு தீவிரமாக நடந்துவருகிறது.

திரைப்படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க விஷ்ணுவர்தன் படக்குழு சில நாட்களுக்கு முன்பே குலுமனாலி சென்று படப்பிடிப்பிறகான ஆயத்தங்களை செய்துகொண்டிருந்தது.

படப்பிடிப்பிற்காக வீட்டிலிருந்து கிளம்பிய அஜித் வழக்கம்போல் ஃபிளைட்டில் செல்லாமல் தனது காரிலேயே குலுமனாலி பயணமாகியிருக்கிறார்.

செல்லும் வழியில் இருக்கும் இயற்கையை இரசித்தபடியே குலுமனாலி சென்ற அஜித் ஓய்வெடுத்த பிறகு தான் வருவார் என்று மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்த படக்குழு, பயணக்களைப்பை போக்காமலேயே படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த அஜித்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்களாம்.  அஜித் வந்து சேர்ந்ததும் பரபரப்பாக படப்பிடிப்பு ஆரம்பமானது.
இதேவேளை, குளிரின் காரணமாக அவ்வப்போது கொடுக்கப்பட்ட ஓய்வு நேரத்தில் குளிரைப் போக்க, இத்திரைப்படத்தின் இரண்டு கதாநாயகிகளும், அதாவது நயன்தாராவும்,டாப்ஸியும் குலுமனாலியிலுள்ள பைக் ரைடிங்கில் சவாரி செய்து வருகிறார்களாம்.

இதன்மூலம் குளிரால் உறைந்துபோன தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below