Saturday, May 18, 2013


சினிமா, அரசியல் உலகில் பிரபலங்களாக இருப்பவர்களின் மண வாழ்க்கை பற்றியும்,சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்வதில் பொதுவாகவே ஆர்வம் அதிகம் இருக்கும்.

ஒரே ஒரு திருமணம் செய்து அவருடன் மட்டுமே கடைசி வரை குடும்பம் நடத்துபவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களைப் பற்றிதான் பத்திரிக்கைகளில் பரபரப்பாக எழுதுவார்கள்.

மூன்று திருமணங்களை செய்த சினிமா, அரசியல் பிரபலங்களைப் பற்றியே இந்த கட்டுரை. மேற்கொண்டு படியுங்களேன்.

எம்.ஜி.ஆர்
  
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பெயர் பார்கவி என்கிற தங்கமணி. 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு சதானந்தவதியை1944ல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

மு.கருணாநிதி 

திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த மு.கருணாநிதிக்கு மூன்று மனைவிகள்தான். பத்மாவதி என்பவரை முதலில் மணம் முடித்த கருணாநிதி அவரது மரணத்திற்குப்பின்னர் தயாளு அம்மையாரை திருமணம் செய்தார். இதன்பின்னர் ராசாத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


ஜெமினி கணேசன்  
 

நடிகர் ஜெமினி கணேசன் பாப்ஜி (அலமேலு) என்பவரை 19வயதில் திருமணம் செய்தார். பின்னர் நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோரை மணம் முடித்தார். தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத்திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி.

கமல் ஹாசன்  

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய முதல் மனைவி வாணியை விவாகரத்து செய்து விட்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார். சரிகா உடனான பிரிவுக்குப் பின்னர் இப்போது கவுதமியுடன் வாழ்ந்து வருகிறார்.


கிஷோர் குமார்
 
   
பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் தன் இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர். இவர் 4 முறை திருமணம் செய்து கொண்டவராம் இதில் இரண்டு பேர் பாலிவுட் நட்சத்திரங்கள்.

சித்தார்த் ராய் கபூர் 

யுடிவி நிறுவனத் தலைவர் சித்தார்த் ராய் கபூர் தற்போது பிரபல நடிகை வித்யா பாலனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சித்தார்த் தனது இளமைக்கால தோழியை முதலில் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக தொலைக்காட்சி தயாரிப்பாளரை மணம்முடித்தார். வித்யா பாலன் அவருக்கு மூன்றாவது மனைவியாவார்.
சஞ்சய் தத்  

பிரபல பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத்தின் முதல் மனைவி மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு 1996ம் ஆண்டு மரணமடைந்து விட்டார். இதன்பிறகு1998ம் ஆண்டு ரியா பிள்ளை என்பவரை திருமணம் செய்தார். அவருடன் விவாகரத்து ஏற்படவே2008ம் ஆண்டு மன்யதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை லட்சுமி

நடிகை லட்சுமி தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டது. மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் திரைப்பட இயக்குநர் சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ராதிகா  

கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்து கொண்டார். அது விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவதாக லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த திருமண பந்தமும் முறிந்த பின்னர் 3வதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below