வெவ்வேறு நாடுகள் அல்லது ஊர்களில் இருக்கும் கணவன்,மனைவி மற்றும் காதலர்கள் ரொமான்ஸ் செய்வதற்கு தூரம் ஒரு இடைஞ்சலாக இருந்தது. இனிமேல் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்தாலும் 'தொட்டே' ரொமான்ஸ் செய்யலாம்.
இதற்காக புதிய செல்போன் மென்பொருளும் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலமாக நேரில் தொடுவதைப் போன்றே உணரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காண்டம் தயாரிக்கும் நிறுவனமான டுரெக்ஸ் நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது. இந்த புதிய முறைக்கு 'பண்டாவேர்'[Fundawear] என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் உள்ள நுட்பம் என்னவெனில், முதலில் பண்டாவேர் என்ற சென்சார் பொருத்தப்பட்ட உள்ளாடைகளை ஆண் மற்றும் பெண் அணிந்துகொண்டு இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன் மென்பொருளுக்குள் நுழைந்து திரையை தொட்டாலே, மற்றவரின் உள்ளாடையை வருடுவதுபோல் உணர்வார்களாம்.
எவ்வளவு தூரத்திலிருந்து வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம். ஆனால் இன்டர்நெட் அவசியம் என டுரெக்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த உடை இன்னும் விற்பனைக்கு வரவில்லை. விரைவில் வரவுள்ளதாக தெரிகிறது. இது எப்படி செயல்படுகிறது என்பதற்கான வீடியோ படம் பின்வருமாறு...
0 comments:
Post a Comment