நடிகை ஆண்ட்ரியாவுக்கும், மலையாள நடிகர் பாஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் “அன்னாயும் ரசூலும்” என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பாஹத் பாசில் பேட்டி அளித்தார்.
ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் ஆண்ட்ரியா முத்தமிடுவது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது கேரள நடிகருடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரையும் மீண்டும் ஜோடியாக வைத்து “நார்த் 24 காதம்” என்ற மலையாள படத்தை எடுக்க டைரக்டர் ராதா கிருஷ்ணமேனன் திட்டமிட்டார்.
இதற்காக ஆண்ட்ரியாவிடமும் பாஹத் பாசிலிடமும் தனித்தனியாக பேசிவந்தார். தற்போது இப்படத்தில் நடிக்க இருவரும் சம்மதித்து உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதால் இவர்களின் காதல் உறுதி படுத்தப்பட்டு உள்ளதாக மலையாள பட உலகில் கிசு கிசு பரவி உள்ளது. படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.
0 comments:
Post a Comment