நடிகை அஞ்சலி தயாரிப்பாளர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு பட உலகில் பேசப்படுவதாக இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து இயக்குனர் களஞ்சியம் கூறுகையில், ஊர் சுற்றி புராணம் படத்தில் அஞ்சலி 15 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார்.
அதன் பின்கு அவர் மாயமானார். இதனால் என் படம் பாதியில் நிற்கிறது. அஞ்சலி தற்போது புனேவில் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் என்று கூறுகிறார்கள்.
அவருடன் அவரின் தாயார் பாரதி தேவி, அண்ணன்கள் ரவிசங்கர், பாபு, அக்கா யாமினி தேவி ஆகியோர் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
அஞ்சலி தினமும் படப்பிடிப்பிற்கு 2 கார்களில் செல்கிறாராம். ஒரு காரில் அவரும், மற்றொரு காரில் அடியாட்களும் செல்கிறார்களாம்.
அஞ்சலி பட அதிபர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு திரையுலகில் தகவல் பரவியுள்ளது.
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ரகிசய திருமண தகவலால் தெலுங்கு திரையுலகினர் அஞ்சலியை புதிய படங்களில் எடுக்கத் தயங்குவதாக கேள்விப்படுகிறேன் என்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment