Saturday, April 27, 2013


நாகார்ஜுனா, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘கிரீக்கு வீருடு’ என்ற தெலுங்கு படம் தமிழில் ‘லவ்ஸ்டோரி’ என்ற பெயரில் வெளியாகிறது. இதன் தமிழ் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது.

விழாவில் நடிகர் மன்சூர்அலிகான் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். விழா மேடையில் நயன்தாராவின் உருவப்பட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் நயன்தாராவின் கையில் பிரபு என்ற பெயரில் பச்சை குத்தி இருந்தது தெரிந்தது.

அதை பார்த்து விட்டு மன்சூர் அலிகான் பேசியதாவது…

பிரபுதேவா பெயரை பிரபு என்று நயன்தாரா கையில் பச்சை குத்தி உள்ளார். இந்த விழாவுக்கு பிரபுதேவா வருவார் என்று எதிர்பார்த்தேன். அவர் இந்தியில் பெரிய டைரக்டர் ஆகிவிட்டார். ரூ.15 கோடி, 20 கோடி என சம்பளம் வாங்குவதாகவும் சொல்கிறார்கள். அவர் பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்திய நேரம் நல்ல நேரமாக அமைந்து இருக்கிறது. 

அதனால்தான் பெரிய டைரக்டராகி இருக்கிறார். எனக்கும் நடிகைகள் என் பெயரை கையில் பச்சை குத்தவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் குத்தமாட்டார்கள்.

நயன்தாரா மனதில் பிரபுதேவா ஆழமாக பதிந்து இருப்பதால்தான் பெயரை கையில் குத்தி உள்ளார். ‘லவ் ஸ்டோரி’ காதல் படமாக தயாராகியுள்ளது. காதல் படங்கள் எல்லாமே வெற்றிகரமாக ஓடியுள்ளன. அதுபோல் இந்த படமும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இசையமைப்பாளர் எஸ்.தமன், வசனகர்த்தா ஏ.ஆர்.கே. ராஜராஜன் தயாரிப்பாளர்கள் பிரசாத், வெங்கட்ராவ் ஆகியோரும் பேசினர்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below