Tuesday, April 23, 2013


பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல வயலின் இசைக்கலைஞர் லால்குடி ஜெயராமன்(82), சென்னையில் நேற்று காலமானார்.தனது 12ஆவது வயதில் வயலின் கலைஞராக இசையுலப் பயணத்தை தொடங்கிய இவர், தனது திறமையாலும், தனித்தன்மையாலும் பெரும் புகழ் பெற்றார்.

கர்நாடக இசை உலகில், மிகப் பிரபலமான செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி சீனிவாச அய்யர் போன்றவர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்த பெருமைக்குரியவராவார்.
இசையமைப்பாளராகவும் திகழ்ந்த லால்குடி ஜெயராமன், தான் இசையமைத்த சிருங்காரம் படத்துக்காக, தேசிய விருது பெற்றார்.

லால்குடி ஜெயராமனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற உயரிய விருதுகளை வழங்கி, கௌரவித்துள்ளது.

லால்குடி ஜெயராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below