Tuesday, April 23, 2013


தேடித்தேடி ஒரு உறவுக்கார பையனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட நடிகை த்ரிஷாவின் அம்மா தற்போது அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவில் நடிகையாக அறிமுகமாக த்ரிஷாவுக்கு தற்போது 29 வயது ஆகிறது. சுமார் 10 வருடத்துக்கும் மேலாக தமிழ்,தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கு அவருக்கு வயது ஏறிக்கெண்டே போவதால் அவரது அம்மா உமா கிருஷ்ணன் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடினார்.

பல மாதங்களாக ஜாதகங்களை அலசி கடைசியில் உறவுக்கார இளைஞர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்வு தெய்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் செய்திகள் பரவின.

தற்போது ஜெயம் ரவி ஜோடியாக 'பூலோகம்', ஜீவா ஜோடியாக 'என்றென்றும் புன்னகை' படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழில் தயாராகும் 'ரம்' படத்திலும் நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்புகள் விரைவில் முடிய உள்ளன.

அதன்பிறகு த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என கூறப்பட்டது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால் தற்போது த்ரிஷா அந்த உறவுக்கார இளைஞரை மணக்க திடீரென்று மறுப்பு தெரிவித்துள்ளார். த்ரிஷாவின் இந்த செயலால் அவரது அம்மா உமா கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்துள்ளாராம். அம்மா உமா கிருஷ்ணன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் திருமணம் வேண்டவே...வேண்டாம் என்று கூறிவிட்டாராம் த்ரிஷா.

தனது திருமணம் நின்று போனதையடுத்து 'பிரியம்' பாண்டியன் இயக்கும் புதிய தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் அவர் இந்தப்படத்தில் சுனைனா, ரம்யா நம்பீசன் ஆகியோருடன் செர்ந்து ஒரு ஹீரோயினாக நடிக்கிறார்.
யாரு மனசு யாரு.. த்ரிஷா மனசுல யாரோ....?

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below