காலிம்போங்: 14 வயது சிறுமியை கற்பழித்ததாக இரண்டு புத்தமத சாமியார்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்களம் மாநிலம் காலிம்போங்கில் 14 வயது சிறுமி மூன்று பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 2 புத்தமத சாமியார்கள் மற்றும் வேன் டிரைவர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 வயது சிறுமியை நேற்று வேன் டிரைவர் தனது வேனில் ஏற்றியுள்ளார். பின்னர் வேனை காட்டுக்குள் ஓட்டி சென்றுள்ளார். அங்கு சிறுமியை இரண்டு புத்த மத சாமியார்கள் மற்றும் வேன் டிரைவர் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் சிறுமியை காட்டிலே விட்டு விட்டு வந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த கிராம மக்கள் சிறுமியை மீட்டுள்ளனர். மேலும், இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் இன்று கைது செய்யப் பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment