Saturday, June 8, 2013

ஜேர்மனியின் வொக்ஸ்வொகன் கார் வடிவம் உலகப் பிரசித்திப் பெற்றது. ஆனால், அந்த காரையோ பாரிய உருண்டையாக மாற்றியுள்ளார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர்.

இச்வான் நூர் எனும் இக்கலைஞர் 1953-ம் ஆண்டின் வொக்ஸ்வொகன் பீட்டில் காரொன்றை இவ்வாறு பாரிய உருண்டை வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அண்மையில் ஹொங்கொங்கில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் இந்த கார் உருண்டையை இச்வான் நூர் காட்சிப்படுத்தினார்.

இது முன்னர் வீதியில் ஓடிய கார் என்று நம்புவதற்கு கடினமான வகையில் முழு உருண்டை வடிவில் இக்கார் உருமாற்றப்பட்டுள்ளது. இக்காரின் சமிக்ஞை விளக்குகள் போன்ற சிறிய பாகங்கள் கூட அகற்றப்படவோ நீக்கப்படவோ இல்லை.

அனைத்து பாகங்களையும் உள்தள்ளி அல்லது சற்று வெளித்தள்ளி இந்த உருண்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. 50 வயதான இச்வான் நூர், ஏற்கெனவே மற்றொரு வொக்ஸ்வொகன் காரை செவ்வகமாக உருமாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below