ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தி நடிகை ஷில்பாஷெட்டி மீது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாடியது தொடர்பாக புகார் கூறப்பட்டுள்ளது.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரது பாஸ் போர்ட்டை பொலிசார் பறிமுதல் செய்தனர். வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஒரு போட்டியில் ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளன. இதனால் ஷில்பாஷெட்டி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். நேற்று மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கணவர் ராஜ்குந்த்ராவுடன் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
0 comments:
Post a Comment