முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும், ஹாலிவுட்டின் கவர்ச்சிக்கன்னியாகவும் திகழ்ந்த எஸ்தர் வில்லியம்ஸ் நேற்று லண்டனில் காலமானார்.
மரணமாகும் போது அவருக்கு 91 வயதாகும். 1940 ஆம் ஆண்டு நீச்சல் போட்டியின் சாம்பியனாக திகழ்ந்த Esther Williams, பின்னர் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
கறுப்பு வெள்ளை படங்கள் எடுக்கும் காலத்திலேயே திரையில் நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களை தனது கவர்ச்சியால் கவர்ந்து இழுத்துவர். இவருடைய கவர்ச்சியை நம்பி தயாரிப்பாளர்கள் பெரும் பணத்தை முதலீடு செய்து மிகப்பெரிய லாபத்தையும் அடைந்தனர்.
Gene Kelly and Frank Sinatr போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெரும் புகழை பெற்றார். 1962 ஆம் ஆண்டு Fernando Lamas என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. அதன்பின்பு குடும்ப வாழ்க்கையில் மூழ்கிய இவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார்.
சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று மாலை அவருடைய வீட்டில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்து இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹொலிவுட் சினிமா கலைஞர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment