பாலிவுட் நடிகை ஜியாகான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த விவகாரம் நயன் தாராவிற்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.
பிரபல தெலுங்கு சேனல்களில் கஜினி படத்தில் நயன் தாரா வேடத்தில் நடித்த பாலிவுட் நடிகை தற்கொலை என செய்தி வாசித்ததை சிலர் தவறாக புரிந்து கொண்டு, நயன் தாராதான் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்து, அவருடைய கேரள உறவினர்களிடம் துக்கம் விசாரித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நயன் தாரா குடும்பத்தினர் நயன் தாராவிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அதன்பின்னரே நயன் தாரா டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், தனது ரசிகர்களுக்கு விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அத்துடன் தனக்கு வந்த போன் அழைப்புகளுக்கு நான் “உயிரோடுதான் இருக்கேன்” என்று சிரித்தபடி பதில் அளித்தாராம்.
0 comments:
Post a Comment