நடிகை குஷ்பு கடைசியாக இளைஞன் என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2011-ல் ரிலீசானது அதன் பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் கலகலப்பு என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.
இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது நீண்ட இடை வெளிக்கு பிறகு ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்பு ஆடுகிறார்.
இந்த படத்தை குஷ்புவின் கணவர் சுந்தர்.சி இயக்குகிறார். இதில் கதாநாயகனாக சித்தார்த், நாயகியாக ஹன்சிகா நடிக்கின்றனர். இதில் அனைத்து நடிகர், நடிகைகளையும் ஆட வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளார்.
இந்த பாடலில் தான் குஷ்புவும் ஆடுகிறார். படத்தின் கிளைமாக்சில் இப்பாடல் காட்சி இடம் பெறுகிறது. ஏற்கனவே பல படங்களில் குஷ்பு ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இப்போது ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்திலும் ஆடுகிறார்.
0 comments:
Post a Comment