Monday, May 27, 2013

சென்னையில் இன்டர்நெட் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இரு இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் இணையதளம் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. புகாரி பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பின் போது இணையதளத்தில் கவர்சிகரமான விளம்பரம் மூலம் வாடிக்கையாளரை பிடிக்கும் ஒரு கும்பலை காவல்துறையினர் கவனித்தனர். அவர்களை பிடிக்க வாடிக்கையாளரை போல காவல்துறையினர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தனர்.

காவல்துறையினர் எதிர்பார்த்தபடி, இணையதள விபச்சார புரோக்கரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. காவல்துறையினரும் வாடிக்கையாளர் போல பேசி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பிறகு அந்த இடத்திற்கு சென்று, அங்கு இருந்த இரண்டு விபச்சார தரகர்களையும், இரு இளம்பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விபச்சாரம் செய்த தரகர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் விபச்சாரத் தொழிலை கடந்த 10 வருடங்களாக செய்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below