தெலுங்கில் முழுமூச்சாக அஞ்சலி கவனம் செலுத்த தொடங்கியுள்ளதால் ஆடிப் போயுள்ளாராம் அமலாபால்.அஞ்சலி மாயமாகி பின்னர் பொலிசில் சரண் அடைந்ததால் அவரது மார்க்கெட் படுத்துவிடும் என்றே அனைவரும் நினைத்தனர்.
ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு ஆந்திராவில் அஞ்சலியின் மார்க்கெட் எகிறிவிட்டது. தற்போது அவர் தமிழை விட தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.
கொலிவுட்டில் இருந்து யாராவது அஞ்சலிக்கு போன் செய்து படம் பற்றி பேசினால் நான் தெலுங்கில் பிசியாக இருக்கிறேன். பிறகு பார்ப்போம் என்று கூறி போனை வைத்துவிடுகிறாராம்.
மேலும் அமலா பால் பேசி வைத்திருந்த தெலுங்கு படம் ஒன்று தற்போது அஞ்சலி வசம் சென்றுவிட்டது.
இதனால் கடுப்பான அமலா சம்பளம் மற்றும் கிளாமரில் தாராளம் காட்ட முடிவு செய்திருக்கிறாராம்.
அஞ்சலி இதுவரை அதிகபட்சமாக சேட்டை படத்திற்கு ரூ.20 லட்சம் சம்பளம் வாங்கினார்.
தற்போது தெலுங்கில் தனக்கு கிராக்கி அதிகரித்துள்ளதை உணர்ந்த அவர் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் 50 லட்சம் வேண்டும் என்கிறாராம்.
0 comments:
Post a Comment