Wednesday, May 8, 2013


குழந்தை பெறும் நிஜ காட்சியில் நடித்த சுவேதா மேனனுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

களிமண் என்ற மலையாள படத்திற்காக சுவேதா மேனன் நிஜ பிரசவ காட்சியை படமாக்க அனுமதித்தார். இயக்குனர் பிளஸ்ஸி படமாக்கினார்.

அப்போது சுவேதா மேனன் கணவரும் உடனிருந்தார். இக்காட்சியில் நடித்த சுவேதா மேனனுக்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகிளா மோர்ச்சா என்ற அமைப்பு மற்றும் பெண் சமூக சேவகர்கள் சுவேதாவை கண்டித்துள்ளனர்.

பெண்கள் சங்க அமைப்பு தலைவி ஒருவர் கூறும்போது,"பெண்களின் மனிதாபிமானமும், தனிமை பண்பும் நெடுங்காலமாக காக்கப்பட்டு வருகிறது.

அதை உடைத்தெறியும் விதமாக அத்துமீறி நடந்திருக்கிறார் சுவேதா மேனன். அவர் தனது 2-வது பிரசவத்தை பொது இடத்தில் டிக்கெட் வினியோகித்து காட்ட தயாராக இருக்கிறாரா?" என்று சூடாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து சுவேதா மேனனிடம் கேட்டபோது, "என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வி கேட்ட பெண்கள் அமைப்பு தலைவி தன்னை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். தனிப்பட்ட முறையில் சில கேள்விகளை அவர்களிடம் நான் கேட்க வேண்டி உள்ளது. எனது நடிப்பு பற்றி தவறான முறையில் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு படம் ரிலீஸ் ஆனதும் நிச்சயம் நான் பதில் அளிப்பேன்" என்றார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below