விரலுக்கு வந்தது நகத்தோடு போச்சு’ என்று எடுத்துக் கொள்வதா, அல்லது ‘பப்ளிசிடிக்காக கிளப்பிவிட்டாய்ங்க… இப்போ இல்லேன்னு ஆகிருச்சு’ என்று அலட்சியப்படுத்துவதா தெரியவில்லை. தலைவாவும் சிங்கம் 2 ம் மோதிக் கொள்ளப் போவதில்லையாம். ஆனால் முன்பு இப்படி ஒரு திட்டம் இருந்ததாக காதை கடித்துக் கொள்கிறார்கள் இங்கே.
விஜய்யின் பிறந்த நாளுக்காவது தலைவாவை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாக துடித்த யூனிட்டுக்கு தோசைக்கல் சூடாக இருந்தும் ஆறிய ஆம்லெட்தான் விடையாக கிடைத்திருக்கிறது. யெஸ்… படத்தை ஜுலைக்கு தள்ளி போட்டிருக்கிறார்களாம். ஏன்?
சத்யராஜ் நடிக்க வேண்டிய காட்சிகள் சில பெண்டிங்கில் இருப்பதால் அதையும் படமாக்கிய பிறகுதான் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியுமாம். அப்ப சிங்கம் ‘ஸோலோ’வா வந்து உறுமிட்டு போவும்னு சொல்லுங்க!
0 comments:
Post a Comment