ஒரே பிசினஸ், ரெண்டு கல்லாப்பெட்டி என்கிற விஸ்தாரமான ஐடியாவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அநேக சினிமாக்காரர்கள். படப்பிடிப்பு நடக்கும் போதே ஒரு டீக்கடையில் நாலைந்து தெலுங்கு போர்டுகளை நட்டு அதையும் படம் பிடித்துக் கொள்கிறார்கள்.
தெருவோர பெயர் பலகைகளையும் தெலுங்கில் எழுதி அதையும் உள்ளே திணித்துக் கொள்கிறார்கள். (அங்கேயும் இதே கதைதான். தெலுங்குக்கு பதிலாக தமிழ்)
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நன்கு அறிமுகமான ஹீரோவோ ஹீரோயினோ படத்தில் இருந்தால் தயாரிப்பாளரின் பாக்கெட் டபுள் பாக்கெட்டாக முளைத்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் உண்டு. இந்த ‘பை மேல் பலன்’ திட்டம் தொடர்ந்து நல்ல முறையில் போய் கொண்டிருப்பதால் விரைவில் வெளிவர இருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப் போகிறார்கள்.
ஹீரோ சித்தார்த்தும், ஹீரோயின் ஹன்சிகாவும் தெலுங்கில் நன்கு அறிமுகமானவர்கள் என்றாலும், மேலும் கொஞ்சம் வலு சேர்க்க திட்டமிட்டாராம் சித்தார்த். நம்ம ஜோடி சமந்தாவையும் ஒரு சீன்ல நடிக்க வைக்கிறேன். யூஸ் பண்ணிக்கோங்க என்று கூறியதால் தீ.வே.கு வில் சமந்தாவும் இருக்கிறார்.
0 comments:
Post a Comment