கொலிவுட்டில் 'சிலந்தி' படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் ஆதிராம், ஷனாகான் நடித்த 'நடிகையின் டைரி' படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
கதையின் நாயகியாக ஷனாகான் நடித்திருக்கும் 'நடிகையின் டைரி' படத்தில் சுரேஷ் கிருஷ்ணா, அரவிந்த், சுபின், ஷாந்தி வில்லியம்ஸ், இயக்குனர் மது மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் அனில் இயக்கியுள்ளார்.
வசனங்களை பட்டைத்தீட்டி, பாடல்களை மெருகேற்றி, ஒரு நேரடித் தமிழ்ப்படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு இப்படம் கொடுக்கும்.
தற்போது பரபரப்பாக பேசப்படும் இந்தப்படம் கவர்ச்சிப்படமல்ல. சினிமா உலகில் கோடி கட்டிப்பறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் காதலும், கண்ணீரும் கலந்த நிஜ வாழ்க்கை இது.
அகால மரணத்திற்கு அவரை இழுத்துச் சென்ற முக்கிய சம்பவங்கள் மட்டும் உணர்ச்சிப்பூர்வமாக இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும் 'என்கிறார் 'நடிகையின் டைரி நிர்வாக தயாரிப்பாளர் ஆதிராம்.
0 comments:
Post a Comment