தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’ படங்களில் நடித்தவர், மலையாள நடிகை ஹனிரோஸ். தற்போது ‘காந்தர்வன்’, ‘மல்லுக்கட்டு’ படங்களில் நடிக்கிறார்.
கேரளாவில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவரிடம்
கேட்டபோது, கூறியதாவது:
எனக்கு நடனத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நடனப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். சமீபத்தில் நான் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அப்போது வழுவழுப்பான தரை வழுக்கியதில், கால் தடுமாறி கீழே விழுந்து விட்டேன். இதில் எனது கணுக்காலில் அடிபட்டு வீங்கியது.
உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், எலும்பில் சிராய்ப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். இரண்டு வாரத்தில் ஷூட்டிங்கிற்கு செல்வேன்.
0 comments:
Post a Comment