இந்நிலையில் ‘நான் ஈ’ பட இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபாலி’ படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் உருவாகிறது. ‘இந்தியில் நடிக்க அனுஷ்காவுக்கு விருப்பம் இல்லை. அவருக்கு பதிலாக சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார்’ என தகவல் வெளியானது. இதை அனுஷ்கா மற்றும் தயாரிப்பாளர் தரப்பினர் மறுக்கின்றனர்.
‘முதல் முறையாக பாஹுபாலி படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் அனுஷ்கா. ஜூலை மாதம் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக பாரம்பரிய கத்தி சண்டை பயிற்சி பெற்றிருக்கிறார்’ என்கிறது தயாரிப்பு தரப்பு.
இப்படத்துக்காக சோனாக்ஷி சின்ஹாவை பரிசீலிக்கவில்லை என்றே இயக்குனர் ராஜமவுலி தரப்பிலும் கூறப்படுகிறது. ஆக, இந்தியில் அனுஷ்கா நடிப்பது உறுதியாகிவிட்டது.
0 comments:
Post a Comment