Wednesday, May 29, 2013

இது நாள் வரை மனிதர்களை ‘எய்ட்ஸ்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது.
அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது.

இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால் அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா கூறுகிறது.
இது நாள் வரை வெட்டை நோயை எதிர்க்கவல்ல புதிய அண்டிபயாடிக் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைகளைத் தந்து காலம் தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகிக்களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என மைக்ரோபயாலஜிஸ்டுகளுக்கான இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

அதே சமயம் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள் மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன்றவை அவசியம் என இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட பிரிட்டனின் முன்னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பவுள்ளார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below