கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வரூபம் 2 இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு விஸ்வரூபம் படத்தை முடித்திருந்தார் கமல். ஏற்கெனவே கணிசமான காட்சிகளை படமாக்கியும் வைத்திருந்த கமல், மீதிக் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்.
அங்கு கமலுடன் ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் சில நாடுகளிலும் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளது.
இப்படத்தினை ஓஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த இரண்டாம் பாகத்தை இந்த ஆண்டே, அதாவது அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Wednesday, May 29, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
0 comments:
Post a Comment