கோ படத்துக்கு பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மலையாள பக்கம் ஒதுங்கினார் கார்த்திகா. தற்போது அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்துக்காக மீண்டும் தமிழுக்கு வந்தார்.
ஆனாலும் தமிழில் குறிப்பிட்டு சொல்லும் படியான வேறு வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் சோகத்தில் இருந்த கார்த்திகாவுக்கு, உற்சாகம் அளிக்கும் வகையில் செமத்தியான கதாபாத்திரத்துடன் டீல் என்ற தலைப்பில், ஒரு படம் புக்காகியுள்ளது.
இதில் ராஜபாளையத்தை சேர்ந்த பிரபலமான தலைவரின் மகளாக நடிக்கிறார்.
பொதுவாக படங்களில் ஹீரோயின் வந்தால், பாடல் காட்சி அல்லது குத்துப் பாடல்கள் தான் திரையில் வரும்.
ஆனால் இந்த படத்தில் கார்த்திகா திரையில் தோன்றினாலே, அதிரடியான சண்டை காட்சிகள் தான் வருமாம்.
0 comments:
Post a Comment