தெலுங்கில் பல படங்களில் சித்தார்த்துடன் இணைந்து நடித்தவர் ஹன்சிகா.அப்படங்கள் வெற்றி பெற்றதால், இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது.இதுதவிர தெலுங்கில் ரொமான்டிக் ஜோடி என்றும் பெயர் பெற்றனர்.
இதன் பின்னர் தமிழில் இருந்து வாய்ப்புகள் சென்றதால் தெலுங்கு படங்களை தள்ளிவைத்து விட்டு தமிழில் முழுநேர நடிகையானார்.இதனால் தொடர்ந்து அவரால் சித்தார்த்துடன் இணைய முடியவில்லை.
ஆனால், தற்போது சித்தார்த்தும் தமிழுக்கு வந்து விட்டதால் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்தனர்.
தங்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகும் என்பதை இந்த படத்திலும் மேலும் நிரூபித்திருக்கிறார்களாம்.
சித்தார்த்துடன் நடித்த அனுபவத்தை பற்றி ஹன்சிகா கூறுகையில், சித்தார்த்தைப் பொறுத்தவரை கேரக்டரில் முழு இன்வால்வுமெண்டுடன் நடிப்பார்.
அவருடன் காதல் காட்சிகளில் நடித்தால், நம்மை நிஜகாதலி போன்றுதான் பார்ப்பார்.
அந்த பார்வையின் அர்த்தம் அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கும் என் போன்றவர்களுக்குத்தான் தெரியும்.சித்தார்த் அழகான ரொம்ப க்யூட்டான நடிகர் என்று வர்ணித்து பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment