பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ரசிகர்களின் செயலினால் மிகவும் வருத்தத்துடன் காணப்படுகிறார்.
சமூக வலை தளங்களில் மற்ற இசையமைப்பாளர்களின் ரசிகர்ளோடு தனது ரசிகர்கள் மோதிக் கொள்வதே இதற்கு காரணமாம்.
யாருக்கு யாரும் எதிரியில்லை. எல்லாருமே நட்புடன் தான் இருந்து வருகிறோம். எனக்கு யாரிடமும், எந்த ஈகோவும் கிடையாது.எல்லாருக்குமே நம் இசையை நான்கு பேர் ரசிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். அதற்காகத் தான் எல்லாரும் வேலை பார்க்கிறார்கள்.
அதே ஆர்வத்துடன் தான் நானும் வேலை பார்த்து வருகிறேன். மரியான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த நட்பு எல்லா இசையமைப்பாளர்களுடனும் தொடரும். என் இசை ரசிகர்களும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று தங்க மீன்கள் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment