அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஆசிய அமெரிக்க பசிபிக் தீவில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரபலங்கள் ஆகியோருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார்.
விருந்து அரங்கத்திற்குள் ஒபாமா நுழைந்தபோது கூடியிருந்த சுமார் 300 பேரும் உற்சாக குரல் எழுப்பி வரவேற்றனர். அவர்களின் வரவேற்பில் நெகிழ்ந்துப் போன ஒபாமா மகிழ்ச்சியாக காணப்பட்டார்.
'சென்டிமென்ட்', 'கொமெடி' என இருவகை பேச்சாற்றலாலும் மக்களை வசீகரிக்கும் கலையை கற்று வைத்துள்ள ஒபாமா, இந்நிகழ்ச்சியின் மூலம் தனது கொமெடியை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்பொழுது விருந்தினர்களிடையே பேசிய அவர், 'உங்கள் உற்சாக ஆரவாரத்திற்கு எனது சட்டை காலரில் படிந்திருக்கும் 'லிப்ஸ்டிக்' அடையாளம் தான் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்' என்றதும் கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி சிரித்தனர்.
இதனையடுத்து ஒபாமா, 'இந்த லிப்ஸ்டிக் அடையாளத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். ஜெசிக்தா சான்ச்செஸ் எங்கே?' என்று கேட்டு கொண்டே விருந்தினர் வரிசையில் இருந்தவர்களை தேடுவதை போல் பாவனை செய்தார்.
ஜெசிக்கா... இதற்கு ஜெசிக்கா காரணமல்ல. அவரது அத்தை தான் காரணம். எங்கே அவர் என்று தேடிய ஒபாமா விருந்தினர் வரிசையில் அமர்ந்திருந்த பிரபல பொப் இசை பாடகியும், 'அமெரிக்கன் ஐடல்' நிகழ்ச்சியின் 11வது சீசனில் வெற்றி பெற்றவருமான ஜெசிக்காவின் அத்தை மேல் லிப்ஸ்டிக் அடையாளத்திற்கான பழியை போட முயன்றார்.
எழுந்து நின்ற ஜெசிக்காவின் அத்தையிடம், 'உங்களால் ஏற்பட்ட விபரீதத்தை பாருங்கள். இதை அனைவர் முன்னிலையிலும் தெளிவாக்கிவிட வேண்டும். இல்லையென்றால் என் மனைவி மிச்செலிடம் மாட்டிக்கொண்டு முழிக்க என்னால் முடியாது.
அதனால் தான் உங்களை அனைவர் முன்னிலையிலும் விழா மேடைக்கு சாட்சியாக அழைக்கிறேன் என்று கூறிய ஒபாமா மீண்டும் அந்த அரங்கத்தில் சிரிப்பலையை உருவாக்கினார்.
இது ஒபாமாவின் நகைச்சுவை உணர்வா? மிச்செலிடம் உஷாராக இருக்க வேண்டும் என்ற முன் எச்சரிக்கை உணர்வா?' என்பது விருந்தினர்களுக்கு புரிய வெகுநேரம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment