Monday, May 6, 2013


கடந்த மாதம் வெளியான பிசினஸ் டுடே இதழின் அட்டைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனை இந்துக் கடவுள் விஷ்ணுவாக சித்தரித்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த அட்டைப் படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஜெயக்குமார் ஹேர்மாத் என்பவர் பெங்களூர் 6-வது கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் விளம்பரத்திற்கு டோனி போஸ் கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது புகாரை ஏற்றுக்கொண்ட கோர்ட், விசாரணையை 12-ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அப்போது டோனி மீது புகார் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த அட்டைப் படத்திற்கு டோனி போஸ் கொடுத்தாரா? அல்லது தனது படத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கினாரா? என்பது தெரியவில்லை.


0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below