Monday, May 6, 2013


இந்த நவீன காலத்தில் அன்பின் அருமை மற்றும் பெருமையை அறியாத சில ஆண்களால் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

ஆண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இயற்கையாகவே, ஒரு திருமணத்திற்கு பிறகு ஒரு மனிதன் வேறு ஒரு உறவை நாடுகின்றான் எனில் அதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்..?

01. சலிப்புத்தன்மை

ஆண்களுக்கு எப்பொழுதுமே வித்தியாசமான செயலில் ஈடுபடுவதில் அதிக உந்துதல் உண்டு. அவர்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றனர் மற்றும் காதலை ஒரு உற்சாகமான விஷயமாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் தற்போதுள்ள வாழ்க்கையில் சலிப்புத்தன்மைக் கொள்கின்றனர்.

02. நச்சரிக்கும் பெண்கள்

ஓயாது நச்சரிக்கும் பெண்ணால், ஆண்கள் மற்றொரு பெண்ணின் உறவை நாடக் காரணமாக இருக்கிறார்கள். ஏனெனில் மற்ற பெண்களாவது தம்மை நன்றாக புரிந்துக் கொண்டு, அன்பு பேனுதலை செய்வார்கள் என்று நினைத்து, அப் பெண்ணை விட்டு செல்கின்றனர்.

03. சபல எண்ணம்

வேலை செய்யும் போது ஒரு பெண்ணிடம் அணுகுதல் மிகவும் எளிதானது. பல ஆண்களுக்கு வணிக பயணங்களின் போது மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள போதுமான வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி தூரத்தில் இருக்கின்ற காரணத்தினால், சபல புத்தியுள்ளவரால், மற்றொரு பெண்ணோடு நேரத்தை செலவிடுவதை தவிர்க்க முடியாது. ஆகவே சபலபுத்தியும், பெண்களை ஏமாற்றுவதற்கு ஒரு காரணம்.

04. கவரும் தன்மை

ஆண்கள் பெரும்பாலும் எளிதில் பெண்களை கவரும் தன்மையுடையவர்கள். அதற்கு மற்றொரு பெண்ணிடம் தங்கள் பார்வையை பதித்து மற்றும் ஏதாவது புது முயற்சிகள் செய்து, அவர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிப்பர்.

05. ஆணாதிக்க தன்மை

சில நேரங்களில் ஆண் தன்னுடைய ஆண் அகம்பாவத்தினால், வேறொரு பெண்ணின் துணையை நாடுவது, அவ்வளவு பெரிய தவறில்லை நியாயமானது தான் என்று மனதில் தோன்ற வைத்து, காதலிக்கும் பெண்ணை ஏமாற்ற வைக்கிறது.

06. உறவுமுறையில் ஒற்றுமை இன்மை

தம்பதியினர் இணக்கமற்றதாகவோ அல்லது ஒற்றுமையில்லாதவராகவோ இருந்தால், அது அந்த ஆணை வேறொரு பெண்ணிடம் ஆறுதல் பெற செய்யும்.

07. மோசமான அந்தரங்க வாழ்க்கை

திருமணம் அல்லது காதல் செய்யும் போது, அந்தரங்க வாழ்க்கையில் திருப்தி இல்லாத காரணத்தினாலும், ஆண்கள் வேறொரு பெண்ணை நாடுவதற்கு காரணமாக இருக்கின்றன.

08. பழிவாங்குதல்

மனைவி விசுவாசமில்லாதவளாக இருக்கின்ற பட்சத்தில், ஆணும் பின்னர் தன் மனைவியை ஏமாற்ற முயற்சிப்பான். அவனும் நேரம் நோக்கி இருந்து, தன் பழிவாங்கலை செய்ய விரும்புவான்.

09. திட்டமிட்ட சூழ்ச்சி

ஆண்கள் தங்கள் மனைவிமார்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்ற எண்ணத்தால், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்.

10. நண்பர்களின் ஏளனம்

சில நண்பர்களின் ஏளனத்தினாலேயே, சில ஆண்கள் மனைவியை ஏமாற்றுவார்கள்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below