உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தென்டுல்கர். மிகவும் சர்ச்சையுடன் முடிந்த இந்த ஐ.பி.எல். போட்டியோடு அவர் ஐ.பி.எல்லில் ஓய்வு பெற்றார். ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற `ஸ்பாட்பிக்சிங்' சூதாட்ட விவகாரம் தொடர்பாக தெண்டுல்கர் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
`ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டம் தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர்
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் குறித்து கடந்த 2 வாரங்களாக வெளிவரும் தகவல்களை எனக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நடைபெறும் தவறான செயல்கள் பற்றிய செய்தி எனக்கு எப்போதுமே காயத்தை ஏற்படுத்தும். கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில் நாம் எப்போதுமே கடுமையாக போராட வேண்டும்.
விளையாட்டில் உண்மை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நமது பங்களிப்பு சிறந்ததாக இருக்க வேண்டும்.
கோடிக்கனக்கான ரசிகர்கள் கிரிக்கெட் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டுக்காக விளையாடுவதை நாம் பெருமையாக கருத வேண்டும். கிரிக்கெட் நிர்வாகிகள் இந்த விளையாட்டின் நம்பகத் தன்மையை பெற அடி மட்டத்தில் இருந்தே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment