Saturday, May 18, 2013


இன்று அனைவரின் கைகளிலும், ஆறா விரலாய் செல்போன் ஒட்டி உறவாடுகிறது.
இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னென்னவென்று கீழே பாருங்க..!

தலைவலி

செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.

சோர்வு

மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளையில் உள்ள செல்களை பாதித்து, விரைவிலேயே சோர்வை உண்டாக்கிவிடும். இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.

தூக்கமின்மை

அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தினால், மனதில் கவலை மற்றும் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடும். மேலும் சில நேரங்களில் உளவியல் ரீதியான பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.

ஞாபக மறதி

செல்போன்களில் அதிர்வுகள் மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்தினால், ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.

மலட்டுத்தன்மை

நிறைய ஆண்கள் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதால், செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மற்றும் வெப்பம், விந்துக்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றை அழித்துவிடும்.

நச்சு எதிர்வினை

செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்தணுக்களை உடைத்து, மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

காது கோளாறு

மொபைல் போனில் அளவுக்கு அதிகமான சப்தத்தில் வைத்து, நீண்ட நேரம் பாட்டு கேட்டாலோ அல்லது பேசினாலோ, அது செவிப்பறையில் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து, காது வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

புற்றுநோய்

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள், உடலில் கட்டிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், அது பற்றிய ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. எனவே “வருமுன் காப்பதே நல்லது” என்பதற்கேற்ப, அதனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

அடிமையாக்கும்

நோமோஃபோபியா என்னும் ஒருவிதமான நோயை இது உண்டாக்கிவிடும். அதுவும் இது ஒருவித நிலையற்ற மனநிலையை உண்டாக்கி, வித்தியாசமான உலகில் இருப்பது போல் மனநிலையை மாற்றிவிடும். மேலும் சில நேரங்களில் அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்பது போல் செய்துவிடும்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below