பிரபல ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி மூலம் அகற்றிக்கொண்டுள்ளார்.
தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறைமூலம் மார்பகங்களை அகற்றிக்கொண்டுள்ளதாக ஏஞ்சலினா ஜோலி நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
6 குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலிக்கு வயது 37.
அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முடிந்தவரை புற்றுநோய் அபாயத்தை குறைத்துக்கொள்வதற்காகவே’ மாஸ்டெக்டோமி செய்துகொண்டுள்ளதாக ஏஞ்சலினா கூறுகிறார்.
கடந்த பிப்ரவரியில் தொடங்கிய சத்திரசிகிச்சை பணிகள் ஏப்ரல் கடைசிப் பகுதியில் முடிந்ததாக ஏஞ்சலினா ஜோலி கூறினார்.
ஏஞ்சலினா ஜோலியின் தாயாரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடி 56 வயதில் உயிரிழந்தார்.
தன்னில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மரபணுக்கள் இருப்பது தெரியவந்த பின்னர், 9 வாரகால சத்திர சிகிச்சை நடைமுறைக்கு சம்மதித்ததாகவும் புற்றுநோய் அபாயம் 87 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துவி்ட்டதாகவும் ஹாலிவூட் நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment